தமிழ்நாடு

நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

Published

on

இந்தியா முழுவதும் நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம், அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை சேர்க்கை நடத்த வலிமையான சட்ட முன்வடிவை பேரவையில் முன்வைக்கும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி. வைத்த அரசு திமுக அரசு என்றும் தொடக்கத்திலிருந்தே நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு எதிர்ப்பதற்கு எந்த திராணியும் அதிமுகவுக்கு இல்லை என்றும் அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வால் 13 பேர் உயிரிழந்தனர் என்றும் அனிதா தற்கொலையும் அதிமுக ஆட்சி காலத்தில்தான் நடைபெற்றது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நீட் நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது நீதிபதி ஏகே ராஜன் குழுவின் அறிக்கையில் தெளிவாகிறது. நீட் தேர்வின் மூலம் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவுகள் தந்துள்ளன.

சிறப்பு பயிற்சி பெறக்கூடிய பொருளாதார வலுப்பெற்ற வகுப்பினருக்கு மட்டுமே நீட்தேர்வு இருக்கிறது. சமூக நீதியை உறுதிசெய்யவும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை நிலைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. எனவே நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்று பரிந்துரைத்தது போலியானது என்றும் கல்வியின் தரம் என்பது மாணவர் சேர்க்கை மூலம் பேணப்படுவது இல்லை என்றும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version