தமிழ்நாடு

மாஸ்க் கழட்ட சொன்ன பெண்ணுடன் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ’வீடு தேடி வரும் மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி சென்றார் என்பதும் அவர் அந்த திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு திரும்பி காரில் சென்று கொண்டிருந்தபோது பெண் ஒருவர் காரை வழிமறித்து தயவுசெய்து மாஸ்க்கை இடங்கள் உங்கள் முகத்தை பார்க்க வேண்டும் என்று கூறியதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கோரிக்கையை அடுத்து முதல்வர் மாஸ்க்கை கழட்டியதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இது குறித்த வீடியோ நேற்று வைரலானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அந்த பெண்ணின் மொபைல் போன் எண்ணை வாங்கி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த பெண்ணுடன் பேசியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நீங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய பண்ணுங்கள், தயவுசெய்து சாலை மற்றும் தண்ணீர் வசதியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தினீர்கள் என்றால் தமிழ்நாடு எங்கேயோ போய் விடும். நீங்கள் மக்கள் முதல்வராக இருக்கின்றீர்கள். நீங்கள் இவ்வளவு எளிமையானவராக இருப்பீர்கள் என்றும் உங்களுடன் பேச முடியும் என்றும் நான் எதிர் ஏற்கவே இல்லை.

நீங்கள் மிகவும் அருமையான ஆட்சியை செய்து வருகிறீர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் 11 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். நீங்கள் அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். நீங்கள் என்னுடன் போனில் பேசியதற்கு மிகவும் நன்றி என்றும் அந்த பெண் கூறினார். மேலும் அந்த பெண்ணின் மகளும் முதல்வருடன் பேசினார். தான் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகவும் விரைவில் பள்ளிகளை திறங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம் என்று இந்த நம்பரை நீங்கள் பயன்படுத்தலாம் என்றும் முதல்வர் கூறியது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்தப் பெண் நீங்கள் எவ்வளவு வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை என்றும் வாழ்த்து கூறினார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version