தமிழ்நாடு

வரும் திங்கட்கிழமை ஊதிய உயர்வு சட்ட முன்வடிவு: முதல்வர் ஸ்டாலின்

Published

on

தமிழக முதல்வராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது அறிவிப்பு ஒவ்வொன்றும் பொது மக்களின் நல்வாழ்விற்கு ஏற்ற வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து திமுக ஆட்சியை இதுவரை வெறுத்து வந்தவர்கள் கூட தற்போது பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் அவர்களது கோரிக்கையை பரிவுடன் பரிசீலனை செய்து அதற்கான தீர்வை தருவதிலும் முதல்வர் தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன்னர் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் கோரிக்கை ஒன்றை வைத்தார். அவரது கோரிக்கை என்னவெனில், ‘ஓய்வுபெற்ற எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் அதிகரிக்க வேண்டும் என்பதுதான்.

பல ஆண்டுகளாக ஓய்வு பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கவில்லை என்றும் அதுகுறித்து முதல்வர் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஓய்வு பெற்ற எம்எல்ஏக்களுக்கான ஓய்வு ஊதியம் 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் சட்ட முன்வடிவு வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

இதனை அடுத்து ஓய்வுபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு மாதம் ரூபாய் 25 ஆயிரம் ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

Trending

Exit mobile version