தமிழ்நாடு

வணக்கம் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை முடியாது: பிரதமர் மீது முதல்வர் சரமாறி குற்றச்சாட்டு

Published

on

வணக்கம் என்று தமிழில் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி மீது சரமாரியாக கூறிய குற்றச்சாட்டுகள் இதோ:

வணக்கம் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிடலாம் என நினைக்கிறீர்கள்தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். நீங்களும் குஜராத் முதலமைச்சராக இருந்து கொண்டுதானே இப்போது பிரதமராக வந்திருக்கிறீர்கள்? அப்போது மாநில உரிமைகளை பற்றி நீங்கள் பேசவில்லையா? இப்போது அதெல்லாம் மறந்துவிட்டதா? தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எப்போதும் எதிரானவர்கள்தான் இந்த பாஜகவும், அதிமுகவும்.

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி Union of States என்று சொன்னதுக்கு பிரதமர் மோடி ஏன் கோவித்துக்கொள்கிறார்? அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதைதானே அவர் சொல்கிறார். நில அரசிடம் இவர்கள் விட்டுவைத்துள்ள ஒரே வருவாய் ஆதாரமே பத்திரப்பதிவு மட்டும்தான்; அதையும் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என கொண்டு வந்து மாநில நிதியில் கைவைத்து விழுங்கி ஏப்பம் விட பார்க்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையும், பேரிடர் நிவாரண நிதியும், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் எங்கே? இதுக்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது; ஆனா, வணக்கம்னு சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திடலாம்னு நினைக்கிறீங்க. தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வேண்டி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்; இதுவரை அந்த நிதி வரவில்லை; எப்போது வருமென்றும் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

என்ற திருக்குறளை சொல்லி குமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துக்கொண்டார்.

seithichurul

Trending

Exit mobile version