தமிழ்நாடு

எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி: உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து முக ஸ்டாலின்!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் தற்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற பாமகவும் தனது சொந்த மாவட்டத்தில் பல இடங்களில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு வார்டு கவுன்சிலராக கூட தேர்வாகவில்லை என்றும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு முழுக்க முழுக்க ஆளுங்கட்சி கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் அவர்கள் கூறியபோது ’எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது என்றும் எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச அளவிலான வெற்றியை கூட அதிமுகவுக்கு தர மக்கள் முன்வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்பதற்காக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்த நாளும் எப்போதும் நெஞ்சில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் காப்போம் என்றும்ம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் அரசு திமுக அரசு என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு உள்ளது என்றும், இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியே அதற்கு சான்று என்றும் மக்களுக்கு தொண்டாற்றுவதே நாங்கள் காட்டும் நன்றி ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version