தமிழ்நாடு

10 வருசமா குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

Published

on

பத்து வருஷமாக தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடுமையாக கடந்த அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு சில மணி நேரங்கள் மழை பெய்தால் மழை நீர் வடியாமல் சாலைகளில் தேங்கி உள்ளது என்பதும் அது மட்டுமின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சுமார் 5 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருந்து சென்னை வந்த பின்னர் உடனடியாக மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

பத்து வருஷமா குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஆனால் அதே நேரத்தில் விமர்சனம் செய்வதற்கு இப்போது நேரமில்லை என்றும், இதை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அடுத்த மழை சீசன் வருவதற்குள் எல்லாவற்றையும் சரி செய்வோம் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்றும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மழை நீரை வெளியேற்றும் பணியை அவர் முடுக்கி விட்டார் என்பதும் தற்போது மின்னல் வேகத்தில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version