தமிழ்நாடு

நாளை ‘வலிமை’யை ரிலீஸ் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

Published

on

நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வலிமையை ரிலீஸ் செய்ய இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சிமெண்ட் விலை உச்சத்திற்கு சென்று வருவதாகவும் திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து விலை அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் டான்செம் நிறுவனத்தின் சார்பில் ‘வலிமை’ என்ற சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த சிமெண்ட் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் ‘வலிமை’ சிமெண்ட் ரிலீஸ் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ‘வலிமை’ சிமெண்ட்டை ரிலீஸ் செய்வார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது அதிக விலை கொடுத்து சிமெண்ட்டை கட்டடம் கட்டும் பொதுமக்கள் வாங்கி வரும் நிலையில் ‘வலிமை’ சிமெண்ட் குறைவான விலையில் தரமான வகையில் கிடைக்கும் என்று அரசு உறுதி கொடுத்துள்ளதால் இந்த சிமெண்ட் அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் கட்டிட காண்ட்ராக்டர்கள் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘வலிமை’ சிமெண்ட் நாளை ரிலீசாக உள்ளதை அடுத்து கட்டிடம் கட்டும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version