தமிழ்நாடு

48 மணி நேரம் இலவச சிகிச்சை, ஊக்கத்தொகை: முதல்வரின் ‘நம்மைக் காக்கும் 48’ திட்டம்

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற இந்த ஆறு மாதத்தில் பல்வேறு திட்டங்களை வெளியிட்டார் என்பதும் அந்த திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனை என மொத்தம் 610 மருத்துவமனைகளில் விபத்துக்கு உள்ளானவர்கள் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அது மட்டுமின்றி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 610 மருத்துவமனைகளில் நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

2. சாலை விபத்தில் சிக்கியவர்களின் முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவச் செலவை அரசே இந்த திட்டத்தின் மூலம் ஏற்கும்.

3. சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதே நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் என்பதன் முதன்மை நோக்கம்

4. விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மருத்துவ காப்பீடு இல்லாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

5. விபத்துக்குள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version