இந்தியா

அகில இந்திய கூட்டமைப்பில் இணையுங்கள்: 36 கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Published

on

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுங்கள்: என இந்தியாவில் உள்ள முப்பத்தி ஆறு கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வர இருப்பதை அடுத்து பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உள்பட பலரும் இந்த முயற்சி எடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது பங்காக அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இதில் இணையுமாறு அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக கட்சி தலைவர்கள் உள்பட முப்பத்தி ஆறு பேருக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ராமதாஸ் மற்றும் சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலருக்கும் ஸ்டாலின் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிராக செயல்படும் என கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version