சினிமா செய்திகள்

ரஜினி மகளின் ஹூட் செயலியில் முதல்வர் ஸ்டாலின்!

Published

on

தனது ஹூட் செயலிக்கு வருகை தந்த தமிழக முதல்வரை வரவேற்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ஹூட் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதும் இந்த செயலி ரஜினிகாந்த் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் தெரிந்தது.

சமூக வலைத்தளமான ஹூட் செயலியில் குரல்வழி மூலமே நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் தங்களது குரல்வழி மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஹூட் செயலியில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ரஜினியின் மகள் அவருக்கு நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களை ஹுட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின்தொடரலாம்’ என பதிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version