தமிழ்நாடு

ஜனாதிபதியை முதல்வர் சந்தித்தது இதற்குத்தானா? வைரல் புகைப்படங்கள்!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக டெல்லி சென்றார் என்பதும் இன்று காலை அவர் ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அவரிடம் இரண்டு கோரிக்கைகள் வைத்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த விழாவிற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முதல்வரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி விரைவில் இந்த இரண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தேன். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன்.

seithichurul

Trending

Exit mobile version