தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் திடீரென ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் பதவி ஏற்றுக்கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஆறாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து இந்த முகாமை நேரில் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கண்ணகி நகர் மற்றும் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு சில முகாம்களைப் பார்வையிஃப்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அதன் பிறகு சென்னை தலைமைச் செயலகம் வருவதற்காக காரில் ஏறச் சென்றார். அப்போது திடீரென கண்ணகி நகர் பேருந்து நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அங்கு கண்ணகி நகரில் இருந்து திநகர் செல்லும் பேருந்தில் ஏறினார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேருந்தில் ஏறியதை கண்டதும் டிரைவர் கண்டக்டர் மற்றும் பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவர் பேருந்து உள்ள அனைத்து பயணிகளிடமும் குறைகளை கேட்டார். மேலும் பேருந்தில் கூடுதலாக என்னென்ன வசதிகள் தேவை என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அதுமட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் முகக் கவசம் அணியாமல் இருந்ததை அடுத்து அவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

கண்ணகி நகரில் இருந்து திநகர் செல்லும் பேருந்தில் திடீரென முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் பொதுமக்களிடம் ஆய்வு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை பேருந்தில் இருந்த சிலர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version