தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் எப்போது? முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நடத்த இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து முக்கிய நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து முடிவுகளும் அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வரும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனை இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இன்றைய ஆலோசனைக்கு பின் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்திடமும் விரைவில் தமிழக அரசு ஆலோசனை செய்ய உள்ளது என்பதும் இன்றைய கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேதியை முடிவு செய்து அதனை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version