தமிழ்நாடு

பதவியேற்ற 8 மாதங்களில் என்னென்ன செய்தேன்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

Published

on

தமிழக முதல்வராக பதவியேற்ற எட்டு மாதங்களில் என்னென்ன செய்தேன் என்பது குறித்து வீடியோ ஒன்றை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது முதல் தற்போது வரை 2619 கோப்புகளில் கையெழுத்திட்டேன் என்றும் வெளிப்படையான நிர்வாகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதாரம் பொதுவெளியில் இருக்கிறது என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது என்றும், மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்றும், வாக்குறுதி அளித்த திட்டங்கள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

2.15 கோடி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவ திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன் என்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றைக் கையெழுத்தில் நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். முதல்வரின் சாதனை அடங்கிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version