தமிழ்நாடு

சைக்கிள் வாங்க வைத்திருந்த ரூ.1000ஐ கொரோனா நிதி கொடுத்த சிறுவன்: முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Published

on

மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் தான் ஆசை ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்
மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஹரிஷ் வர்மன். இவர் சைக்கிள் வாங்குவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அந்த பணத்தை அவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார்

அவர் அத்துடன் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை காப்பாற்ற நான் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை உங்களுக்கு தருகிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்

இது குறித்த செய்தி ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். சைக்கிள் வாங்கி வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய ஹரிஷ் வர்மனுக்கு புத்தம் புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். தற்போது அந்த சிறுவன் முதல்வர் கொடுத்த சைக்கிளை ஓட்டி வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

seithichurul

Trending

Exit mobile version