தமிழ்நாடு
முதலமைச்சரின் துபாய் பயணத்திற்கு அரசு செலவு செய்ததா? தமிழக அரசு
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய் பயணம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சர் மேற்கொண்ட துபாய் பயணத்திற்கான செலவின பட்டியல் ஏதும் அரசு வசம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபற்றி கேள்வி ஒன்றுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. துபாயில் நடைபெற்ற உலக வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகவும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் சமீபத்தில் துபாய் சென்றனர்.
முதலமைச்சருடன் அவரது குடும்பத்தினரும் சென்றனர் என்பதும் வேறு சிலரும் சென்றதாக சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் துபாய் பயணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செலவு குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசும், அரசு பயணமாக முதலமைச்சர் சென்றார் என்று மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலில் பயண செலவு குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் துபாய் பயணத்தின் செலவு ஏதும் அரசு பெறவில்லை என்றே பதில் அளிக்கப்பட்டுள்ளது.