தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி போல உழவன் வேஷம் போட விரும்பவில்லை: முக ஸ்டாலின் பரப்புரை

Published

on

எடப்பாடி பழனிச்சாமி போல உழவன் என்று வெளி வேஷம் போட விரும்பவில்லை என்றும் ஆனால் உழவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்வேன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதியில் மக்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை காணொளி மூலம் முதல்வர் முக ஸ்டாலின் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்ட மக்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தை காணொளி மூலம் அவர் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில் அவர் மேலும் கூறியதாவது:

தஞ்சை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வியக்கும் வகையில் மகாமகம் திருவிழாவை நடத்தியது திமுக ஆட்சி. 1992ல் அதிமுக ஆட்சியில் மகாமகம் விழாவில் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.

நான் என்னை உழவன் என்று சொல்லிக்கொண்டது இல்லை; ஆனால், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, புரிந்து செயல்பட்டேன். எடப்பாடி பழனிசாமி போல வெளிவேஷம் போட்டுக்கொண்டு திரியவில்லை.

காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க பாஜகவின் பல்லக்கு தூக்கியாக இருந்த எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைதிகாத்த ஒன்றிய அரசை கண்டிக்க கூட முன்வரவில்லை; திமுக பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி போராடியது. இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலின் பேசி வருகிறார்.

 

seithichurul

Trending

Exit mobile version