தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் ஆலோசனை: என்னென்ன முக்கிய சலுகைகள்?

Published

on

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு இந்த கூட்டம் கூட இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். அந்தவகையில் விவசாய பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகியவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சர்களுடன் நாளை முதவர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் மற்றும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது குறித்து ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு கண்டிப்பாக இந்த பட்ஜெட்டில் இருக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version