தமிழ்நாடு

முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: முதல்வர் இன்று ஆலோசனை!

Published

on

முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாகவும் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்யவிருப்பதாகவும் ஆலோசனைக்கு பின்னர் இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறியுள்ளார்

மேலும் நாளை பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்க இருப்பதை அடுத்து அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாகவும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்வு என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும் மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

seithichurul

Trending

Exit mobile version