தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பது எப்போது? உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படப்வில்லை என்பதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி விட்டது என்பதும், பஞ்சாப் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் சமீபத்தில் அவர் பள்ளிக்கல்வித்துறை இயக்கக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அந்த வகையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நாளை என்பதை அடுத்த நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனை முடிந்த பின்னர் அவர் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்தும் பள்ளிகளில் நடந்து கொள்ள வேண்டிய ,வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் நேற்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version