தமிழ்நாடு

கொரோனா பரவல் குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை: மீண்டும் கட்டுப்பாடுகளா?

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக 50-க்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று தமிழகத்தில் 50க்கும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா மூன்று அலைகளில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நான்காவது அலை தமிழகத்தில் இல்லை என்றாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மாஸ்க் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதும் மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version