தமிழ்நாடு

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Published

on

நேற்று அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மரம் விழுந்து முறிந்ததால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவரை காப்பாற்றினார் என்பதும், இதுகுறித்த வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்து போய்விட்டார் என எல்லோரும் நினைத்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மட்டும் அந்த இளைஞரை தன்னுடைய தோளில் தூக்கி ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும் தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எத்தனை இடர் வரினும் இருள் சூழினும் மனிதநேயம் எனும் மணிவிளக்கின் ஒளி அவற்றைப் போக்கி புது நம்பிக்கையை அளிக்கிறது! உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் செயல் அத்தகைய ஒளியே!

மேலும் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்று குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Trending

Exit mobile version