தமிழ்நாடு

விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை கைதி விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இன்று முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஒரு லட்ச ரூபாய் கொடுத்து விக்னேஷ் குடும்பத்தினரின் வாயை அடைத்து விட்டால் மட்டும் போதாது என்றும் இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .

இந்த நிலையில் விசாரணை கைதியான விக்னேஷ் மரணத்தில் உரிய நீதி கிடைக்கும் என்ற விக்னேஷ் மரணத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

இந்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக அதிமுக சார்பில் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version