தமிழ்நாடு

பட்டாசுக்கடை தீவிபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்த முதல்வர்!

Published

on

நேற்று இரவு கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த கடையின் ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகளில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டும் அதே போன்ற ஒரு துக்க நிகழ்வு நடந்துள்ளது தீபாவளி கொண்டாட இருக்கும் கள்ளக்குறிச்சி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சங்கராபுரம் நகரத்தில் ஏற்பட்ட பட்டாசு கடைகள் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 5 லட்சமும், சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் நிதியுதவி என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி கூறியபோது, ‘கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தாருக்கு ஆறுதல். முதல்வர் அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார்கள். விலைமதிப்பற்ற உயிர்கள், விபத்துகளில் பறிபோவது வேதனையாக உள்ளது. பொதுமக்கள்-வியாபாரிகள் கவனமாக இருக்கவும்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version