தமிழ்நாடு

சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்: ஊழியர்கள் மகிழ்ச்சி!

Published

on

நெல் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பல்வேறு பணியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படக் கூடிய ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா அவர்கள் சட்டமன்றத்திலும் இது குறித்து பேசினார், அதன் பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் பேசினார், ஏன் என்னிடம் கூட பேசினார். இதனடிப்படையில் தற்போது ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியதால் இதுகுறித்த அறிவிப்பை இன்று வெளியிடுகிறேன்.

தொழிலாளர்களின் கோரிக்கையை உணவுத்துறை அமைச்சர் அவர்களும் நானும் பரிசீலனை செய்து நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் கணக்காளர்கள் மாதாந்திர ஊதியம் ரூபாய் 5285 ஆகவும் உதவியாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஊதியம் ரூபாய் 5218 ஆகவும் உயர்த்தி உள்ளோம்.

அதுமட்டுமின்றி அகவிலைப்படியை தொகை ரூபாய் 3499 ரூபாய் சேர்த்து வழங்கிட ஒப்புதல் அளிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து டிஆர்பி ராஜா எம்எல்ஏ அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அறிவித்து அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்திட்ட தாயுள்ளம் கொண்ட தலைவா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version