தமிழ்நாடு

ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு

Published

on

வரும் ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியர்களுக்கும் மீண்டும் அகவிலைப்படி வழங்கப்படும் எனவும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகப்படியான செலவு அரசுக்கு ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாக்கும் ஒப்படைப்பு விடுப்பு ரத்து, விடுப்பு கால பயண சலுகை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டதால் மீண்டும் அகவிலைப்படி கிடைக்கும் என்றும் விடுப்பு பயண சலுகை மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணமாக்கும் முறையும் அமலுக்கு வரும் என்று அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் இன்று சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீடிப்பு என்றும் அவர் அறிவித்துள்ளார் இந்த இரண்டு அறிவிப்புகள் காரணமாக 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் “அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மகன், மகள்கள் சேர்க்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version