தமிழ்நாடு

ஆளுனருடன் முதல்வர் சந்திப்பு: என்னென்ன கோரிக்கைகள்?

Published

on

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை கிண்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று முதல்வர் – ஆளுநர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுனரிடம் முதல்வர் கோரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுனர் ஆர்.என் ரவி அவர்களிடம் நேரில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் பேரறிவாளன் சமீபத்தில் விடுதலையான நிலையில் நளினி, முருகன் உள்பட 6 பேர் விடுதலை குறித்தும் ஆளுனரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வருடனான இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் கோரிக்கை விடுத்தபடி அனைத்து மசோதாக்களுக்கும் அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version