தமிழ்நாடு

முதலமைச்சரின் ஒரே ஒரு கையெழுத்தால் 82,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து பொது மக்களின் வரவேற்பை முதல்வர் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது 84 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திடவுள்ளார். இந்த ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் தமிழகத்திலுள்ள ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 17297 கோடி ரூபாய் முதலீட்டில் 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. கேபிடல் லேண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளன.

ஆட்டோமொபைல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தால் 82,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சென்னை கிண்டியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 14 திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார் என்பதும், இதில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version