தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு ஜோசியம் தெரியுமா? கருத்துக்கணிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி

Published

on

தேர்தலுக்கு முன் வெளிவந்த கொண்டிருக்கும் கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘கருத்து கணிப்புகள் அனைத்தும் ஸ்டாலினின் கருத்துக்கள்’ என்றும், ‘ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என சமீபகாலமாக தேர்தல் பிரச்சாரங்களில் முக ஸ்டாலின் கூறி வருவது குறித்து கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் ’ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும்? 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று எப்படி கூறுகிறார்? வரும் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என எண்ணுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

MK Stalin - edappadi palanisamyமேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அனைத்து கருத்து கணிப்புகளும் திமுக வெற்றி பெறும் என்று கூறியது, ஆனால் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி நாங்கள் வெற்றி பெற்றோம். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும் மழையாலும் புயலாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்கியுள்ளோம். பயிர்க் கடன்களை ரத்து செய்து உள்ளோம். எனவே பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறினார். மேலும் மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து ஆட்சியில் இருக்கும்போது அதனை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் என்பதால் எங்களை மீண்டும் ஒருமுறை மக்கள் ஆட்சி அமைக்க அனுமதிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Trending

Exit mobile version