தமிழ்நாடு

முக ஸ்டாலினின் அடுத்த திட்டத்திற்கும் ஆப்பு வைத்த முதல்வர்!

Published

on

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்யும் சாதனைகள் குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அவரது கொடுத்து வருகிறார்.

ஆனால் முக ஸ்டாலின் கொடுத்துக்கொண்டிருக்கும் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிறைவேற்றி வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் 100 நாட்களில் குறைகள் தீர்க்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள மக்கள் தங்களுடைய குறைகளை அரசுக்கு தெரிவித்தால் அந்த குறை 100 நாட்களில் தீர்க்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு அதிரடியாக தமிழக முதல்வர் ஒரு திட்டத்தை கொண்டு வந்து உள்ளார். இதன்படி 1100 என்ற எண்ணை அழைத்து நீங்கள் உங்கள் குறைகளை பதிவு செய்தால் உடனடியாக அந்த குறை தீர்க்கப்படும் என்றும் இந்த திட்டம் இன்னும் ஓரிரு நாளில் அமலுக்கு வர இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற மாதிரி திட்டங்களை கொடுக்க வேண்டும் என்றும் அந்த காலத்தில் இருப்பதுபோல் மனுக்களை வாங்கி அவற்றை படித்து பார்த்து அதன் குறைகளை போக்குவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். எனவே திமுக தலைவரின் அடுத்த திட்டத்திற்கும் ஆப்பு வைக்கும் வகையில் முதல்வர் அதிரடியாக புதிய திட்டத்தை அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
seithichurul

Trending

Exit mobile version