தமிழ்நாடு

“ஸ்டைலா… கெத்தா…”- ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிளிங் செய்த முதல்வர் ஸ்டாலின்; வைரல் பிக்ஸ்!

Published

on

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது அவரது பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்குத் தெரிந்தது. அவர் அவ்வப்போது தன் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் நோக்கில் சைக்கிளிங் செல்வதும் வழக்கம்.

அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று அவர், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்று உள்ளார். அப்போது வழியில் அவருடன் பல பொது மக்கள் உரையாடி உள்ளனர்.

அவர்களுடன் இணைந்து உற்சாகமாக செல்ஃபிகள் எடுத்துக் கொண்டும், உற்சாகம் ததும்பியும் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்தான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த தீவிர கொரோனா தாக்கம் சில வாரங்களாக மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்படலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version