தமிழ்நாடு

அரசாங்கம் நடத்த கஷ்டப்படுறோம்; பல்வேறு பிரச்னைகள்: புலம்பிய எடப்பாடி!

Published

on

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின் தொழில் பூங்காவை அமைக்கிறது கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம். 235 தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாக உருவாகப்போகும் இந்த தொழில் பூங்காவுக்கான தொடக்க விழா கோவையில் நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி சம்பத், பெஞ்சமின் மற்றும் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய கொடிசியா நிர்வாகிகள் தொழிற் பூங்கா அமைப்பதற்குப்பட்ட சிரமங்களை கூறினார்கள். தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த தொழிற் பூங்கா அமைப்பதற்குப்பட்ட சிரமங்களை இங்கே கொடிசியா நிர்வாகிகள் சொன்னார்கள். அதேபோலத்தான் நாங்களும் பல்வேறு கஷ்டங்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தொழில் பூங்கா அமைக்கின்றபோதே இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்னும்போது ஒரு அரசை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர வேண்டும். 234 சட்டமன்ற தொகுதிகளையும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட மாநிலம் இது. இங்கே பல்வேறு பிரச்னைகள் உருவாக்கப்படுகிறது. சில அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக அப்படியான பிரச்னைகளை உருவாக்குகிறார்கள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version