தமிழ்நாடு

6 பேரின் மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே காரணம்: வைகோ பகீர் குற்றச்சாட்டு!

Published

on

கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு நேற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு வராது எனவும் அதைத் தடுத்து வைத்துள்ளோம் எனவும் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு குடியரசுத் தலைவரையும் சென்றடைந்துவிட்டது என்றெல்லாம் கூறி நமது மாணவர்களை நம்ப வைத்தனர்.

2017-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட அந்த இரண்டு மசோதாக்களையும் அப்போதே நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு. ஆனால் அதை வெளியில் சொல்லாமல் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசீலனையில் இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியுள்ளனர். உண்மை தற்போது வெளிவந்துவிட்டது.

நீட் தேர்வு வராது என்று தமிழக மாணவர்களை நம்பச் செய்து, ஏழரைக் கோடி தமிழக மக்களை ஏமாற்றி கடைசியில் நீட் தேர்வு வந்து மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஆறு பேர் தற்கொலையே செய்து இறந்துபோய்விட்டனர். இந்த ஆறு பேரின் மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என்பதால் அவரும் பதவி விலக வேண்டும் என வைகோ ஆவேசமாக பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version