தமிழ்நாடு

நிலவேம்பு, கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

Published

on

கொரோனாவுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, தமிழகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜொரோனா வைரஸை தடுக்க இந்திய பாரம்பரிய மருத்துவத்துறையில் வழிகள் இருக்கிறதா என்று ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் ஆயுஷ் வழிமுறைப்படி நிலவேம்பு, கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடக்கமாகக் காவல் துறையினருக்கு கபசுரக் குடிநீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கபசுரக் குடிநீர் கொரோனா வைரஸ்க்கு எதிரான மருந்து அல்ல. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மட்டுமே உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version