தமிழ்நாடு

தன் மீதான கொலை, கொள்ளை பழி: எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசிய தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொடநாட்டில் நடந்த கொலைகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். இது அதிமுக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில் தன் மீதான கொலை மற்றும் கொள்ளை பழிக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், இவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக நேற்றே சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

மேலும், இதில் அரசியல் பின்புலம் உள்ளதென நான் கருதுகிறேன். அரசியலில் நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாத திராணியற்றவர்கள்தான் இப்படிப்பட்ட கோழைத்தனமான குறுக்குவழியைக் கையாள்வார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

seithichurul

Trending

Exit mobile version