தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி நெருப்பில் கூட நடந்து வருவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Published

on

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மற்றும் இந்த கொலை கொள்ளையில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியலில் இந்த விவகாரம் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் முதல்வரோ இது அரசியல் காரணங்களுக்காக கூறப்பட்ட புகார் எனவும் இதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என கூறினார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த விவகாரத்தில் ஆதரவாக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். சாத்தூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடநாடு கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீன் எடுத்துள்ளனர் என்பதை முதல்வர் ஆதாரப்பூர்வமான நிரூபித்துள்ளார்.

குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நாங்கள் கடலில் இறங்கி வரச்சொன்னாலும் வருவோம். நெருப்பில் இறங்கி வரச் சொன்னாலும் முதல்வர் வருவார். எதற்கும் அவர் தயாராக இருக்கிறார், ஏனெனில் அவர் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. முதல்வர் தெளிவாகவும், துணிவாகவும் இருக்கிறார். ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார் ராஜேந்திர பாலாஜி.

seithichurul

Trending

Exit mobile version