தமிழ்நாடு

‘முதல்வர் வேட்பாளர்’ சர்ச்சை… அதிமுக நிர்வாகிகளின் ‘அந்தர் பல்டி’ பேட்டிகள்!

Published

on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக, ‘அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. எனவே கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பவர் குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைமைதான் அறிவிக்கும்’ என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறது. இதனால் அதிமுகவுக்கும் – பாஜகவுக்கும் நாளுக்கு நாள் மோதல் முற்றி வருகிறது. இப்படியான சூழலில் சில அதிமுக நிர்வாகிகள், அக்கட்சிக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் கூட கருத்துகள் சொல்லியிருப்பது மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறார்கள்.

இதுவரை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ‘முதல்வர் வேட்பாளர் சர்ச்சை’ குறித்துப் பேசியதாவது:-

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் – மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் – கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளரை ஜே.பி.நட்டா தான் அறிவிப்பார்- தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

இரட்டை இலையை முடக்க சதி நடக்கிறது. நமக்கு வரப்போகும் தேர்தல் வாழ்வா சாவா என்று நிர்ணயிக்கப் போகிறது – சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

அதிமுக தொண்டர்களுக்கு சில தலைவர்கள் துரோகம் செய்கிறார்கள். அதிமுகவை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது – அன்வர் ராஜா

முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மௌனம் சம்மதம் என்றுதான் பொருள்- அமைச்சர் கடம்பூர் ராஜு

இப்படி தங்கள் கட்சிக்கு எதிராகவும், ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு கருத்தையும் சொல்லி வருவதால், அதிமுகவில் அனைவரும் ‘எவ்வளவு கட்டுக்கோப்பாக’ இருக்கிறார்கள் என்று கேலி செய்யப்பட்டு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version