தமிழ்நாடு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முதல்வர், டிஜிபி குன்னூர் செல்லவுள்ளதாக தகவல்

Published

on

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ உயரதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை தீவிரமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து தொலைபேசியில் மாவட்ட நிர்வாகத்திடம் விவரம் கேட்டறிந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் குன்னூர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் முப்படை தளபதி பிபின் ராவத் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version