தமிழ்நாடு

பின்வாசல் வழியே ஜரூராக நடந்த வியாபாரம்: ஜவுளி கடைகளுக்கு அபராதம் விதிப்பு

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக மால்கள் திரையரங்குகள் பெரிய கடைகளை அடைக்க வேண்டும் என்றும் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது

இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பை மீறி ஒரு சில பெரிய கடைகள் திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்தது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளி கடைகள் போட்டிபோட்டுக்கொண்டு பின்வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வெளிவந்தது

இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக அந்த கடைகளுக்கு சென்று பார்த்தபோது பின்வாசல் வழியாக 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் வெளியேற்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து எந்தவிதமான அச்சமும் இன்றி வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் வியாபாரிகள் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version