தமிழ்நாடு

நாளை முதல் 4 மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் இயங்க அனுமதி!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியாக அறிவிப்பின்படி நான்கு மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகைக்கடைகள் இயங்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் ஜவுளி கடைகளுக்கு அனுமதி என்றும் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்க வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு மாவட்டங்களில் நகைக் கடைகள் இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை முதல் விளையாட்டு பயிற்சிகள் இயங்க அனுமதி என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். திறந்தவெளியில் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனைகள், திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version