தமிழ்நாடு

அக்டோபர் 4 முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவக்கம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே. அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது தொடங்கும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அக்டோபர் 4ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என்றும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலை அறிவிய,ல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளுக்கும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் மிகவும் உற்சாகமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version