தமிழ்நாடு

சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு என்னவாக்கும்… தேர்வு கமிட்டியில் நீதிபதி சிக்ரி நியமனம்!

Published

on

சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனால் 3 மாதமாக நிலவி வந்த குழப்பம் முடிவிற்கு வந்துள்ளது.

இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார். இன்று காலைதான் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கினார்.

மத்திய அரசு இந்த வழக்கு மூலம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்புதான், சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பில் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இப்போது எந்த விதமான முக்கிய முடிவுகளும் எடுக்க கூடாது. மூன்று பேர் கொண்ட உயர் தேர்வு கமிட்டி குழு இந்த கட்டாய விடுப்பு குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த கமிட்டி தற்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டியின் உறுப்பினராக பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் செயல்படுவார்கள். இதில் மூன்றாவது உறுப்பினராக உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்படலாம், அல்லது அவர் நியமிக்கும் நபர் செயல்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பதிலாக நீதிபதி ஏ.கே சிக்ரியை உறுப்பினராக நியமித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version