வணிகம்

இந்திய வாடிக்கையாளர்கள் வங்கி சேவையிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி!

Published

on

சிட்டி வங்கி, இந்தியா உட்பட 13 வாடிக்கையாளர்கள் வங்கி சேவையிலிருந்து சிட்டி வங்கி வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் வங்கி சேவையில் வேகமாக வளர்ச்சி அடையக் கூடிய கூறுகள் இல்லை. ஆனால் வெல்த் மேனேஞ்மெண்ட் என அழைக்கப்படும் செல்வ மேலாண்மை வணிகத்தில் வங்கி சேவைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

எனவே இந்தியா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சீனா, இந்தோநேஷியா, கொரொயா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலாந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் வங்கி சேவை வணிகத்திலிருந்து சிட்டி வங்கி வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அதே நேரம் சிட்டி வங்கியின் வெல்த் மேனேஞ்மெண்ட் வணிகம் நடைபெறும் சிங்கப்பூர், ஹாங் காங், ஐக்கிய அமீரகம், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வங்கி சேவை வழங்கப்படும்.

சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர்கள் வங்கி சேவையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து இருந்தாலும், அது உடனே அமலுக்கு வராது மற்றும் ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என, சிட்டி வங்கியின் இந்தியத் தலைமை செயல் அதிகாரி ஆஷு குல்லர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version