உலகம்

ஜனவரி 14க்குள் தடுப்பூசி போடவில்லையெனில் வேலைநீக்கம்: சிட்டி வங்கி நிர்வாகம் அறிவிப்பு!

Published

on

ஜனவரி 14ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் வேலை நீக்கம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பெருவாரியாக செய்யப்பட்ட போதிலும் ஒரு சிலர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என்பதும் அவர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி 14ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பணியாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அமெரிக்க நிதி நிறுவனமாக சிட்டி குழுமம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் தொற்று பரவி வருவதை அடுத்தே கட்டாய தடுப்பூசி திட்டத்தை இந்த நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது என்பதும் அதே நேரம் மதம் மற்றும் மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாதவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிட்டி வங்கியில் பணிபுரியும் அமெரிக்க ஊழியர்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு என்றும் மற்ற நாடுகளில் உள்ள கிளைகளில் பணிபுரியும் சிட்டி வங்கி ஊழியர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version