தமிழ்நாடு

பிப்ரவரி 1 முதல் திரை அரங்குகளுக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

Published

on

பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரை அரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரை அரங்குகள் திறக்கப்பட்டான. ஆனாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுகள் இருந்தன.

பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படக் குழுவினர் 50 சதவீத இருக்கைகளை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழக அரசும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவதாக ஜனவரி முதல் வாரம் அறிவித்தது.

அடுத்த ஓர் இரு நாட்களில் மத்திய அரசின் அழுத்தம், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு போன்ற காரணங்களால் திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்ற அறிவிப்பைத் தமிழக அரசு வாப்பஸ் பெற்றது.

இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரை அரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான விதிமுறைகளை மாநில அரசுகள் விரைவில் வெளியிடும்.

புதிய தளர்வுகள் வழங்கப்பட்டாலும் அது முழுமையான ஊரடங்கு தளர்வு இல்லை என்றும், பிப்ரவரி 28 வரை தளர்வுகளுடனான ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version