செய்திகள்

ஓரினச்சேர்க்கை உறவு: வரவேற்கும் திரை பிரபலங்கள்!

Published

on

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதல்ல என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்புக்கள் இருந்தாலும் பல தரப்பில் இருந்து இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-இன் படி ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களுடன் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. ஒருவழியாக இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வாசிக்கப்பட்டது.

அதில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உறவு கொள்வது சட்டவிரோதமல்ல என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக திரை பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர் இந்த தீர்ப்பை.

நடிகை திரிஷா #சமஉரிமை #பிரிவு377 #ஜெய்ஹோ போன்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்தத் தீர்ப்பை வரவேற்று முன்னதாக யுனைடெட் நேஷன்ஸ் இந்தியா பதிவிட்டுள்ள பதிவையும் தனது பக்கத்தில் அவர் ரீட்வீட் செய்துள்ளார்.

கரன் ஜோஹர், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இந்தத் தீர்ப்பானது மனிதநேயத்திற்கும், சம உரிமைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நாடு திரும்ப சுவாசிக்க ஆரம்பித்துள்ளது என்றார்.

சோனம்கபூர், இந்த இந்தியாவில் வாழவே நான் நினைக்கிறேன், இந்தியாவை அன்பு செய்கிறேன் என்றார். பிரீத்தி ஸிந்தா, இந்த தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது. யாரை விரும்புகிறோமோ அவர்களை எந்த தடையுமில்லாமல் விரும்பலாம் என்றார். ஹியூமா குரேஷி, இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, நமது அனுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version