தமிழ்நாடு

சென்னையை மட்டுமே தேர்வு செய்த திரையுலக பிரபலங்கள்!

Published

on

 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் சில திரையுலக பிரபலங்களும் போட்டியிட உள்ளனர் என்பதும் அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பி விட்டார்கள் என்பதும் தெரிந்ததே. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திரையுலக பிரபலங்களில் கமல்ஹாசன் தவிர பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் சென்னையிலேயே போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியில் நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட பல திமுக பிரபலங்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி நடிகை ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார். மயிலாப்பூர் தொகுதியில் பல வருடமாக இவர் இருப்பதால் அந்த பகுதி மக்களிடம் நெருங்கி பழகி உள்ளதால் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக தலைவர் முக ஸ்டாலின் மூன்று முறை போட்டியிட்ட தொகுதியான இந்த தொகுதியில் கடந்த முறை குக செல்வம் போட்டியிட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் திடீரென பாஜகவில் இணைந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் குஷ்பு வெல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட இயக்குனரும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தற்போது சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முதன் முதலாக இவர் சென்னையில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்ததே, பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் சென்னையில் மட்டுமே போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version