பல்சுவை

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் – தயாரிப்பது எப்படி?

Published

on

இதோ… கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. கேக், ஸ்வீட்ஸ் என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கிறிஸ்துவ வீடுகளில் இருந்து பார்சல் அள்ளும். பொங்கல், பிரியாணி, கேக் ஆகியவை தானே இங்கு சமத்துவத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது. அதன்படி, கிறிஸ்துமஸ் கேக் கேட்டு இப்போதே நண்பர்களிடம் ஆர்டர் வைத்திருப்போம்.

எனினும், நாம் கூட சிம்பிளாக கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் செய்யலாமே.

கிறிஸ்துமஸ் கேக் செய்முறை

தேவையான பொருட்கள்

மைதா மாவு -300 கிராம்
பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்
சோடா உப்பு -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -200 கிராம்
பொடித்த சர்க்கரை -250 கிராம்
முந்திரிப்பருப்பு -50 கிராம்
உலர்ந்த திராட்சை -50 கிராம்
செர்ரி -50 கிராம்
முட்டை -3
பிஸ்தா பருப்பு -50 கிராம்
சுல்தானாஸ் -50 கிராம்
பட்டை மசாலா தூள் -1 டீஸ்பூன்
கோக்கோ -1 டீஸ்பூன்
பிராண்டி – 4 டேபிள் ஸ்பூன்
போர்டு வைன் – 4 டேபிள் ஸ்பூன்
வென்னிலா எஸ்சென்ஸ் -சில துளிகள்

குறிப்பு : பிராண்டி மற்றும் போர்ட் வைன் உபயோகப்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் பால் -100 மில்லி உபயோகப்படுத்தலாம்.

செய்முறை:

மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா, உப்பு, பட்டை மசாலா இவைகளை ஒன்றாக கலந்து மூன்று முறை சலிக்கவும்.
பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.
குழைத்த வெண்ணை கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.
மைதா மாவில் ஊற்றி எல்லாம் ஒன்று சேரும்படி ஒரே திசையில் லேசாக அழுத்தம் தராமல் கலக்கவும்.
இவற்றில் கோக்கோ, பிராண்டி – வைன் (அல்லது பால்) மற்றும் எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக செர்ரி பழங்கள், உலர்ந்த திராட்சை, சுல்தானாஸ், முந்திரிப் பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் 140 டிகிரி செல்சியஸ்-க்கு பேக் செய்யவும்.

வெந்ததும் வெளியில் எடுத்து, சூடு ஆறிய பின்னர் எடுத்து விரும்பியபடி அலங்காரம் செய்யலாம்.

இந்திய மக்களின் விருப்ப உணவு எது தெரியுமா? ஸ்விகி வெளியிட்ட சீக்ரெட்..!

seithichurul

Trending

Exit mobile version