சினிமா

கிறிஸ்டியன் பேலின் ‘வைஸ்’ டிரெய்லர் ரிலீஸ்!

Published

on

ஹாலிவுட்டின் விக்ரம் என அழைக்கப்படும் கிரிஸ்டியன் பேலின் ‘வைஸ்’ பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ள இந்தப் படம் அடுத்த வருடத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஆஸ்கர் ரேஸில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சியில், உலக அரங்கில், அமெரிக்காவைத் தூக்கி நிறுத்த உதவியவர் துணை ஜனாதிபதி டிக் சென்னி. அவரது பயோபிக்கை எடுத்து விளையாண்டுள்ளார் கிறிஸ்டியன் பேல், வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாகத் திரைக்கு வரும், இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஆஸ்கர் போட்டியில், கடும் போட்டியாளராகவும், பல விருதுகளை வெல்லும் வெற்றியாளராகவும் திகழும் என்பது படத்தின் டிரெய்லரை பார்த்தாலே புரிந்து விடும்.

ஜார்ஜ் புஷ்-ஆகச் சாம் ராக்வெல், டிக் சென்னியின் மனைவி லின்னே சென்னியாக எமி ஆடம்ஸ், அமெரிக்காவின் தலைமை அதிகாரியாக ஸ்டீவ் கேரல் என நட்சத்திர பட்டாளமே, இப்படி ஒரு பவுர்ஃபுல்லான படத்தில் இணைந்துள்ளனர்.

வரும் கிறிஸ்துமஸ் கிறிஸ்டியன் பேல் கிறிஸ்துமஸாக அமையவுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version