உலகம்

ஜமைக்காவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பிவைத்த இந்தியா; உருக்கமாக நன்றி தெரிவித்த கிறிஸ் கெய்ல்!

Published

on

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஜமைக்கா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். 

இதுவரை இந்திய தரப்பில், ஜமைக்காவுக்கு சுமார் 50,000 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்நாட்டின் கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரே ரஸல், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து கெய்லும், பிரதமர் மோடிக்கு நன்றி கூறி நெகிழ வைத்துள்ளார்.

இது குறித்து கெய்ல், ‘கொரோனா தடுப்பூசியை ஜமைக்காவுக்கு அனுப்பி வைத்தமைக்காக பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று காணொலி வாயிலாக கூறியுள்ளார். 

கெய்லின் காணொலி இதோ:

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் ‘கோவாக்ஸின்’ கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் இந்த தடுப்பூசி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல உலகின் பல நாடுகளுக்கும் இந்த தடுப்பூசி தொடர்ந்து ஏற்றும்தி செய்யப்பட்டு வருகின்றன. 

seithichurul

Trending

Exit mobile version